விஜய்யுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
நேருக்கு நேர், கில்லி, ஆதி, போக்கிரி, சிவகாசி மற்றும் வில்லு போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவர் 'தளபதி 66' படத்தில், பாசிட்டிவ் ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவாரஸ்யமாக, இதற்கு முன்பு வம்சியின் பிருந்தாவனம், தோழா மற்றும் மகரிஷி ஆகிய படங்களிலும் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார்.
விஜய்யுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், ’ஹாய் செல்லம்ஸ்... நாங்கள் திரும்பி வந்துவிட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிந்து மாதவி!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தளபதி 66 படக்குழு ஏற்கனவே படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. தற்போது அதன் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடந்து வருகிறது. நடிகர்கள் பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக 'தளபதி 66' படக்குழு சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.