Home /News /entertainment /

12 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்தில் இடம் பெறும் பிரகாஷ் ராஜ்… இந்த முறையும் வில்லனா?

12 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்தில் இடம் பெறும் பிரகாஷ் ராஜ்… இந்த முறையும் வில்லனா?

பிரகாஷ் ராஜ் - விஜய்

பிரகாஷ் ராஜ் - விஜய்

தளபதி 66 படத்தில் விஜய்யுடன் சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

12 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இடம் பெற்றுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் – பிரகாஷ் ராஜ் காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 2004-ல் வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு வில்லான முத்துப்பாண்டி என்ற கேரக்டரில் பிரகாஷ் ராஜ் மிரட்டியிருப்பார்.

இதன்பின்னர், 2005-ல் சிவகாசி, 2007-ல் போக்கிரி, 2009-ல் வில்லு ஆகிய படங்களிலும் பிரகாஷ் ராஜ் இடம்பெற்றிருந்தார். இவை அனைத்திலும் பிரகாஷ் ராஜ் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். குறிப்பாக போக்கிரியில் அவரது வில்லத்தனம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

இதையும் படிங்க - விஜய் ரசிகர்களுக்கு மெகா அப்டேட்… தளபதி 66 ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்

2009-க்கு பின்னர் விஜய்க்கு வாய்த்த வில்லன்கள் பெரும்பாலும், வட இந்திய மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

இதையும் படிங்க - தளபதி 66 அப்டேட் தந்த இசையமைப்பாளர் தமன்… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்…

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் இடம் பெற்றுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.



தளபதி 66 படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் பிருந்தாவனம், தோழா மற்றும் மகரிஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் நடித்த படங்கள் அனைத்திலும் அவர் வில்லனாக நடித்திருப்பார். ஆனால் இந்த முறை படத்தில் அவருக்கு பாசிட்டிவ் கேரக்டர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 66 படத்தில் விஜய்யுடன் சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay, Prakash raj

அடுத்த செய்தி