பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் சோலோ ஹீரோவாக நடித்த 'ஜீரோ' கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அதற்குப்பின் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்துள்ள 'பதான்' படத்தைக் காண ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கிறார்கள். பதான் திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இடையில் அவர் சிறப்பு தோற்றங்களில் நடித்த 'ராக்கெட்ரி', 'லால் சிங் சத்தா' போன்ற படங்கள் மட்டுமே வெளியாகின.
மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'பதான்' படம் ஹிந்தி மட்டுமல்லாது, தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க, ஜான் ஆபிரஹாம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திலிருந்து பேஷாராம் ராங் என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்தப் பாடல் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. தீபிகா படுகோன் கவர்ச்சிகரமாக தோன்றும் இப்பாடலானது கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது என்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி boycott pathaan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.
Disgusting … How long should we tolerate these ..Colour Blind #AndhBhakts .. #justasking https://t.co/SSgxKpvcE9
— Prakash Raj (@prakashraaj) December 14, 2022
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா, ''இப்பாடலில் காவி நிற பிகினி அணிந்து தீபிகா நடனமாடுவது கண்டனத்துக்குரியது. இப்பாடலில் நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் காவி மற்றும் பச்சை வண்ணங்களில் உடை அணிந்து நடனமாடுவது மாற்றப்படவேண்டும். இல்லையென்றால் இப்படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிடுவதா வேண்டாமா என்று பரிசீலிக்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பதான் பாடலுக்கு எதிரான கருத்துகளுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் நரோத்தமின் செய்தியைப் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், ''அருவருப்பாக உள்ளது. எவ்வளவு நாள் இந்த மாதிரியான வண்ணக் குருடை பொறுத்துக்கொள்ள வேண்டும்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரகாஷ் ராஜின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.