ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Love Today Box Office : லவ் டுடே படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

Love Today Box Office : லவ் டுடே படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

லவ் டுடே திரைப்படம்

லவ் டுடே திரைப்படம்

Love Today : லவ் டுடே படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் வெளியிட்டு இருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  லவ் டுடே திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

  கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார். கடந்த 4-ம் தேதி வெளியான இந்த திரைப்படம்_ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, லவ் டுடே திரைப்படத்திற்கு இளைஞர்களின் வருகை அதிகமாக இருந்தது.

  இதன் காரணமாக முதல் நாளில் இருந்தே லவ் டுடே திரைப்படம் வசூலை குவித்து வந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 20 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 55 கோடி வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது . லவ் டுடே திரைப்படம் 6 கோடி செலவில் எடுக்கப்பட்டது.

  மலையாளப்பட இயக்குநர் சென்ன ஹெக்டேயின் '1774 வொயிட் ஆல்டோ' படம் எப்படி இருக்கு?

  மேலும் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் வெளியிட்டு இருந்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு பெரும் லாபம் கிடைத்திருப்பதாக கூறுகின்றனர். இதுவரை ஷேர் தொகையாக மட்டும் 27 கோடி ரூபாய்க்கு மேல் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Kollywood, Tamil Cinema