ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்… மூன்றே நாட்களில் வியக்க வைக்கும் கலெக்சன்…

வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்… மூன்றே நாட்களில் வியக்க வைக்கும் கலெக்சன்…

லவ் டுடே படத்தில் பிரதீப் - இவானா

லவ் டுடே படத்தில் பிரதீப் - இவானா

கடந்த வெள்ளியன்று வெளியான சுந்தர் சி. யின் காபி வித் காதல் உள்ளிட்ட படங்களை ஓரங்கட்டி விட்டு லவ் டுடே வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள லவ் டுடே படத்தின் 3 நாட்கள் கலெக்சன் விபரம் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் கடந்த 2019-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். முன்பு வந்த படங்களை போல் இல்லாமல், புதிய கதைக் களத்தில் கோமாளி படம் ரசிகர்களை கவர்ந்தது.

  கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக பெரிய ஹீரோவை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக நடித்து படத்தையும் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான லவ் டுடேவின் தலைப்பை படக்குழுவினர் பெற்றனர்.

  மனசுக்கு நெருக்கமான காதல் காவியங்கள்.. தமிழ் சினிமாவின் எவர் கிரின் லவ் மூவிஸ்!

  இந்நிலையில் பிரதீப் இயக்கி நடித்து யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான லவ் டுடே திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. காதலை மையமாக கொண்டு காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் பெரும்பாலான ரசிகர்களை திருப்தி அடையச் செய்தது.

  இந்த படத்தில் இவானா, சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த வெள்ளியன்று வெளியான சுந்தர் சி. யின் காபி வித் காதல் உள்ளிட்ட படங்களை ஓரங்கட்டி விட்டு லவ் டுடே வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

  PHOTOS : ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் மலையாள சினிமாவின் இளம் நடிகை…

  படம் வெளியாகி 3 நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ. 19 கோடியை இந்தப் படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. வார நாளான இன்றும் பெரும்பாலான திரையரங்குகளில் இந்தப் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood