முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் ஹிந்தியில் ரீமேக்காகும் 'லவ் டுடே' " - தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்!

"சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் ஹிந்தியில் ரீமேக்காகும் 'லவ் டுடே' " - தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்!

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்

ஜிகர்தண்டா, காஞ்சனா, விக்ரம் வேதா என தொடர்ச்சியாக தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு தோல்வியைத் தழுவின.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோமாளி படத்துக்கு பிறகு இயக்குநர் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மிகக் குறைந்த முதலீட்டில் உருவான இந்தப் படம் ரூ. 100 கோடி வசூலைப் பெற்றதாக சமீபத்தில் இந்தப் படத்தின நூறாவது நாள் விழாவில் இயக்குநர் பிரதீப் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். யுவன் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தியில் வருண் தவான் நடிக்க ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை போனி கபூர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். அவரது பதிவில், பான்டோம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லவ் டுடே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறோம். சிறப்பான நடிகர்கள், கலைஞர்களுடன் இந்தப் படத்தை உருவாக்குவதில மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

லவ் டுடே படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜிகர்தண்டா, காஞ்சனா, விக்ரம் வேதா என தொடர்ச்சியாக தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு தோல்வியைத் தழுவின. இதனால் லவ் டுடே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வது சரியான முடிவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

First published:

Tags: Remake movies, Yuvan Shankar raja