• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கோமாளி பட இயக்குனரின் அடுத்தப்பட ஹீரோ யார் தெரியுமா?

கோமாளி பட இயக்குனரின் அடுத்தப்பட ஹீரோ யார் தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்

ஸ்டுயோ கிரீன் சின்ன பட்ஜெட்டில் அதிக படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்றாக கோமாளி இயக்குனரின் படத்தை தயாரிக்கிறார்கள். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அவரது புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

16 வருடங்கள் கோமாவில் இருக்கும் நாயகன் திடீரென கோமாவிலிருந்து மீண்;டெழுகிறான். இன்றைய நாகரிக உலகின் தொழில்நுட்பங்கள், அதனால் உருவான மனித உணர்வின் வெற்றிடங்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை நகைச்சுவை கலந்து கோமாளி சொன்னது. படம் பரவலான வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குவார் என கூறப்பட்டது. இந்த செய்தி வெளியானது 2019 அக்டோபரில். ஆனால், இன்றுவரை அதுகுறித்து மேலதிக தகவல்கள் இல்லை. பிரதீப் ரங்கதானின் அடுத்தப் படம் எது? யார் நடிக்கிறார்கள்? கோடம்பாக்கத்தை அலசியதில் கிடைத்த தகவல்கள் ஆச்சரியமானவை.

Also read... சர்வைவர் எலிமினேஷனுக்குப் பிறகு இந்திரஜா சங்கர் வெளியிட்ட உருக்கமான பதிவு!

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க முன்வந்துள்ளது. பிரதீப் ரங்கநாதனே இதில் நாயகனாக நடிக்கிறார். கோமாளி படத்திலும் இவர் ஆடடோ டிரைவராக சிறிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டுயோ கிரீன் சின்ன பட்ஜெட்டில் அதிக படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்றாக கோமாளி இயக்குனரின் படத்தை தயாரிக்கிறார்கள். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: