மீண்டும் யானையுடன் மிரட்ட வரும் பிரபு சாலமன்... ‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மீண்டும் யானையுடன் மிரட்ட வரும் பிரபு சாலமன்...  ‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
காடன் பட ஃபர்ஸ்ட் லுக்
  • Share this:
ராணா, விஷ்ணுவிஷால் நடித்துள்ள காடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரி படத்தை அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. பாகுபலி படத்துக்குப் பின் நடிகர் ராணா டக்குபதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கும் படக்குழு அதில் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி இத்திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியாகிறது. படம் குறித்து ட்வீட் செய்திருக்கும் நடிகர் ராணா, 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தேசிய அளவில் திரைக்கு வரும் படம். தாமதத்துக்கு மன்னிக்கவும். நீங்கள் காத்திருந்ததற்கு தகுதியான படம் இது” என்று கூறியுள்ளார்.



மேலும் படிக்க: காதலர் தின திட்டத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு - ஹரிஷ் கல்யாண்



First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்