ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரசாந்த் படத்தில் அனிருத், விஜய் சேதுபதி, பிரபுதேவா?

பிரசாந்த் படத்தில் அனிருத், விஜய் சேதுபதி, பிரபுதேவா?

பிரசாந்த்

பிரசாந்த்

சிறப்பம்சம் என்னவென்றால், இந்தப் பாடலுக்கு 'மாஸ்டர்' பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரபுதேவா மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளனர். 

  நடிகர் பிரசாந்தின் கம்பேக் படமான அந்தகன், இந்தி பிளாக்பஸ்டர் அந்தாதூனின் ரீமேக்காக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்தகன் படத்தின் முதல் சிங்கிளான என் காதல், வெளியானது. சித் ஸ்ரீராம் இந்தப் பாடலை பாடியிருந்தார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  இதற்கிடையே அந்தகனின் இரண்டாவது பாடலான டோரா புஜ்ஜியில் பிரபலங்கள் ஒன்றிணைந்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இப்பாடலை பாடியிருக்கின்றனர். இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தப் பாடலுக்கு 'மாஸ்டர்' பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

  பிரமாண்டத்தின் உச்சம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அவதார் 2 ட்ரைலர்!

  க்ளைமேக்ஸுக்கு பிறகு வரும் டோரா புஜ்ஜி பாடலில் பிரசாந்த், அனிருத், சிம்ரன், ப்ரியா ஆனந்த் மற்றும் பலர் இடம்பெறுகின்றனர். இந்த பாடல் காட்சிக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு முடிந்ததும், ஆடியோ வெளியீட்டை நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Prashanth