முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குழந்தைகளை கவரவே மைடியர் பூதம் படத்தில் மீசையின்றி நடித்தேன் - பிரபுதேவா!

குழந்தைகளை கவரவே மைடியர் பூதம் படத்தில் மீசையின்றி நடித்தேன் - பிரபுதேவா!

நடிகர் பிரபு தேவா

நடிகர் பிரபு தேவா

பிரபுதேவா மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் என். ராகவனின் இயக்கத்தில் குழந்தைகளுக்கான படமாக 'மை டியர் பூதம்'  உருவாக்கப்பட்டுள்ளது. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மைடியர் பூதம் படத்துக்காக முதன்முறையாக மீசையின்றி நடித்திருப்பதாக நடிகர் பிரபு தேவா தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் என். ராகவனின் இயக்கத்தில் குழந்தைகளுக்கான படமாக 'மை டியர் பூதம்'  உருவாக்கப்பட்டுள்ளது.  அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ள இந்தப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் பிரபுதேவா ஜீனி என்ற பூதமாக நடிக்கிறார். குழந்தை நட்சத்திரங்களான பரம் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா ஆகியோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இப்படத்திற்கு  இமான் இசையமைத்துள்ளார்.  ஒளிப்பதிவு யு கே செந்தில் குமார், எடிட்டிங் சான் லோகேஷ், கலை ஏ ஆர் மோகன் மேற்கொள்ள தேவா வசனம் எழுதியுள்ளார்.

Also read... காளி ஆவணப்படத்தின் கதை இதுதான் - இயக்குநர் லீனா மணிமேகலை விளக்கம்!

'மை டியர் பூதம்' படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் OTT உரிமையை முறையே ஜீ தமிழ் மற்றும் Zee5 அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மைடியர் பூதம் படத்துக்காக முதன்முறையாக மீசையின்றி நடித்திருப்பதாக நடிகர் பிரபு தேவா தெரிவித்துள்ளார். நடுத்தரவயது முதல் வைத்திருந்த தாடியை ரசிகர்களின் விருப்பத்துக்காக எடுத்துள்ளதாகவும், மீசையில்லாத புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். குழுந்தைகளை கவர வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே மீசையின்றி நடித்ததாக பிரபுதேவா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment, Prabhu deva