இந்தியாவின் ‘மைக்கேல் ஜாக்சன்’ என திரையுலகில் கொண்டாடப்படும் திரைக் கலைஞன் பிரபு தேவாவின் திரைப்பயணம் பற்றிய பதிவு.
'அக்னி நட்சத்திரம்' திரைப்படத்தில் ' ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' பாடலில் குரூப் டான்ஸராக தோன்றி 'இதயம்' திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஏப்ரல் மேயிலே பசுமையே இல்ல' பாடலில் தனித்துத் தெரிந்து ’சூரியன்’ திரைப்படத்தில் ’லாலாக்கு டோல் டப்பிமா’ மற்றும் காதலனில் ’முக்காலா முக்காபுலா’ பாடலில் பிசிறு கிளப்பி பின்னாளில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்ஸன் ஆனவர் பிரபுதேவா.
பிரபு தேவாவின் ‘மை டியர் பூதம்’ படத்தை பாராட்டிய உதயநிதி!!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ’காதலன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மோஸ்ட் வாண்டட் கதாநாயகனும் ஆனார் பிரபு தேவா. அது முதல் பிரபுதேவாவின் காட்டில் அடைமழை பெய்ய தொடங்கியது. ’மிஸ்டர் ரோமியோ’, ’மின்சாரக்கனவு’, ’விஐபி’, ’நாம் இருவர் நமக்கு இருவர்’, ’காதலா காதலா’, ’அள்ளி தந்த வானம்’ என்று படங்களை அள்ளிக் கொடுத்து ரசிக்க வைத்தார் பிரபு தேவா.
கோவிலுக்கு வந்த இடத்தில் சீரியல் கதை.. சினேகா - சங்கீதா - சரண்யா கொடுத்த ஷாக்!
பிரபுதேவாவின் மின்னல் வேக நடனம் ரசிகர்களை கட்டிப்போட்டது. குறிப்பாக ரோஜாவுடன் இணைந்து பிரபு தேவா ஆடிய ஆடல்கள் பெரும் வெற்றி பெற்றன. ’ராசையா’ திரைப்படத்தில் ‘காதல் வானிலே’ ’சுயம் வரம்’ திரைப்படத்தில் ’சிவ சிவ சிவ சங்கரா’ பாடல்… ’ஏழையின் சிரிப்பில்’ திரைப்படத்தில் ‘யெப்பா யெப்பா ஐயப்பா’ பாடல்களில் பிரபுதேவாவின் நடன எக்ஸ்பிரசன்களில் இதயம் தொலைத்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.
நடனம் நடிப்பு என பட்டாசு கிளப்பி கொண்டிருந்த பிரபு தேவா இயக்கத்திலும் பட்டாசு கிளப்பினார். தெலுங்கில் இவர் இயக்கிய ’நுவ்வொஸ்தானண்டே நேனொதண்டானா’ மற்றும் ’பௌர்ணமி’ திரைப்படங்கள் சக்கைபோடு போட்டது. தமிழில் விஜயை வைத்து இவர் இயக்கிய ’போக்கிரி’, ’வில்லு’ மற்றும் ஜெயம் ரவி நடித்த ’எங்கேயும் காதல்’ படங்கள் இவரின் ஆட்டம் போலவே ஸ்டைலிஷாக அமைந்தன. அதுபோல் ஹிந்தியில் சல்மான்கானை வைத்து இவர் இயக்கிய ’வான்டட்’ திரைப்படம் சல்மான்கானுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த படமாகவும் அமைந்து ரவுடி ரத்தோராக்கியது பிரபுதேவாவை,
பிரபுதேவாவின் நடனத்தையும் நடிப்பையும் பார்த்து பல நாட்களாகிப் போயிருந்த நேரத்தில் தமிழ் சினிமாவிற்கு ’தேவி’, ’குலேபகாவலி’, ’பொன் மாணிக்கவேல்’, ’தேள்’ போன்ற திரைப்படங்கள் மூலம் ரீ என்ட்ரியும் கொடுத்தார் பிரபு தேவா. 'காதலனின் 'பேட்டராப்' பில் ஆரம்பித்து 'குலேபகாவலி' படத்தின் 'குலேபா' பாடல் வரை தெறிக்க விடும் பிரபு தேவா சினிமா ரசிகர்களின் காதலனே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kolywood, Prabhu deva, Tamil Cinema