முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபுதேவா, ரெஜினா நடிப்பில் விடலைப் பருவ காதலை சொல்லும் பிளாஷ்பேக்!

பிரபுதேவா, ரெஜினா நடிப்பில் விடலைப் பருவ காதலை சொல்லும் பிளாஷ்பேக்!

பிரபுதேவா, ரெஜினா

பிரபுதேவா, ரெஜினா

இந்தப் படத்தில் பிரபுதேவா எழுத்தாளராக நடித்துள்ளார். இதுவரை அவர் செய்யாத வேடம். ஆசிரியராக ரெஜினா. அவரை அவரது மாணவன் காதலிப்பதாக கதை.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மீசை அரும்பும் பருவத்தில் எதிர்பாலினத்தின் மீது உருவாகும் காமம் கலந்த காதலை சொல்லும் படத்தில் பிரபுதேவாவும், ரெஜினாவும் நடித்துள்ளனர்.

மகாபலிபுரம், கொரில்லா படங்களை இயக்கிய டான் சான்டியின் அடுத்தப் படம் பிளாஷ்பேக். கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பது என்றால், அது பெரும்பாலும் முதல் காதலாகவே இருக்கும். ஆட்டோகிராஃப், பிரேமம், 96 என அனைத்துப் படங்களும் இந்த காதலின் தடத்தில் பயணிப்பவை. அதிலிருந்து மாறுபட்டு, மீசை அரும்புகிற இள வயதில் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணிடம் உருவாகும் காதலை மையப்படுத்தி இந்த பிளாஷ்பேக் படத்தை டான் சான்டி எடுத்துள்ளார்.

இந்தவகை படங்களுக்கு சிறந்த உதாரணம் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள். அதில் பிரதாப்போத்தனைப் பார்த்து கிராமத்தில் உள்ள சிறுவர்கள் சிகரெட் பிடிக்க முயல்வது நுட்பமான சித்தரிப்பு. அந்த சாயலில் பிளாஷ்பேக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால், காப்பி இல்லை, அதே உணர்வு.

இந்தப் படத்தில் பிரபுதேவா எழுத்தாளராக நடித்துள்ளார். இதுவரை அவர் செய்யாத வேடம். ஆசிரியராக ரெஜினா. அவரை அவரது மாணவன் காதலிப்பதாக கதை. மெலினா படத்தின் சாயலைக் கொண்டு இந்த கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கியிருப்பதாக கேள்வி. படம் திரையரங்கில் வெளிவர வாய்ப்பில்லை. ஓடிடியை மனதில் வைத்து எடுக்கிறார்கள்.

Also read... பெயர் சிக்கலில் மாட்டிய சாய் பல்லவியின் தங்கை படம்...!

படத்தை கொடைக்கானல், மற்றும் சென்னையில் எடுத்துள்ளனர். தெலுங்கின் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படம் வெளிவந்தால் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓடிடிக்கென படங்கள் எடுக்கும் முயற்சிகள் துரிதப்படலாம்.

First published:

Tags: Prabhu deva, Regina Cassandra