ஃபாரஸ்ட் மேன் ஆப் இந்தியாவின் கதைதான் 'காடன்' - பிரபு சாலமன்

ஃபாரஸ்ட் மேன் ஆப் இந்தியாவின் கதைதான் 'காடன்' - பிரபு சாலமன்
இயக்குநர் பிரபு சாலமன்
  • Share this:
காடன் படம் உருவான விதம் குறித்து இயக்குநர் பிரபு சாலமன் மனம் திறந்துள்ளார்.

தொடரி படத்தை அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. பாகுபலி படத்துக்குப் பின் நடிகர் ராணா டக்குபதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.


கடந்த 10-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு, ஏப்ரல் 2-ம் தேதி காடன் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்தது. இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இன்று படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் பிரபு சாலமன்,  “இந்தப் படம் சிறு பொறியாகத் தெரிந்தாலும் புரட்சித் தீயாகப் பரவும் என நம்புகிறேன். இட்டுக் கட்டி எடுக்கப்பட்ட படம் அல்ல. ஜாதவ் பியெங் என்பவர் 2015 ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஃபாரஸ்ட் மேன் ஆப் இந்தியா. அப்துல்கலாமுக்கு  நெருக்கமானவர். பிரம்மபுத்திரா நதியோரம் பல ஆயிரம் ஏக்கரில் காட்டை உருவாக்கியுள்ளார். அவரை மையமாக வைத்து உருவாக்கிய படம் தான் காடன். கும்கியில் அவரை பற்றிப் பேசாமல் கடந்து விட்டோம்.

காட்டை அதிகம் நேசிப்பவன் நான். அசாமின் காசி ரங்கா என்ற பகுதியில்  பன்னாட்டு நிறுவனத்தால் கட்டடம் கட்டப்பட்டு யானைகளின் வழித்தடம் அடைக்கப்பட்டது. நமக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே மெரினாவிலும் , சாலையிலும் நின்று போராடுகிறோம். ஆனால்  யானைகளின் பிரச்னையை யாரால் பேச முடியும். உலகின் மொத்த யானைகளின்  எண்ணிக்கையில் 55 %  இந்தியாவில்தான் இருந்தது ஆனால் இன்று அந்த  எண்ணிக்கை குறைந்து வருகிறது.யானையின் சாணத்திலிருந்தே பல மரங்கள் முளைக்கும் . ஊட்டியிலும் யானைகளின் வழித்தடத்தில் சுவர்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தது. இதை திரைக்கதையாக எடுத்துள்ளோம்.

படத்தில்  உண்மை சிதையாமல் இருக்க வேண்டும் என்பதால் வியட்நாம்,  தாய்லாந்து நாடுகளுக்குச்  சென்று படம் பிடித்தோம். மாறன் என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இன்று பல நடிகர்கள் கதை கேட்கவே நேரம் ஒதுக்கமாட்டார்கள். ஆனால் விஷ்ணு தொலைபேசியில் பேசினாலே படப்பிடிப்பு க்கு வந்து விடுவார்.

சினிமாக்களில் காட்டப்படுவதைப் போல மரம் காதலர்கள் சுற்றி வருவதற்கு மட்டுமானதல்ல. சுவாசத்திற்கான அடிப்படையே மரம்தான். பசுமை எல்லோருக்கும்  பிடித்தமானது.

ஆஸ்திரேலியாவில் ஒரு யானை தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளது.” என்றார்
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading