மீண்டும் யானைக்கதை சொல்ல வருகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.. ‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..

கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போன ‘காடன்’திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் யானைக்கதை சொல்ல வருகிறார் இயக்குநர் பிரபு சாலமன்.. ‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..
காடன் போஸ்டர்
  • Share this:
'கும்கி' திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்திருக்கும் ராணா, 'பாகுபலி' படத்துக்குப் பிறகு ‘காடன்’ படத்துக்காக இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்தார். விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.

3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் 40 நாட்கள் நடைபெற்றது. பின்பு உன்னி என்ற யானையை வைத்து கேரளாவில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.


பின்பு, புனேவில் உள்ள சதாரா, மும்பை பிலிம் சிட்டி, காரகர் என தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். பெரும் காடுகள், மலைகள் என கஷ்டப்பட்டு பல காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அவை அனைத்துமே திரையரங்கில் பார்த்தால் மட்டுமே, அதன் பிரமாண்டம் தெரியும் என்பதால் இத்திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: பிரபல நடிகருக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து..

ஏற்கெனவே ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. தற்போது 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ‘காடன்’ திரைக்கு வரும் என்று ஈரோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
First published: October 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading