ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாடல் வெளியீட்டு விழா மேடையில் பதற்றம்… தடுமாற்றத்துடன் பேசிய ஹீரோ அஸ்வின்…

பாடல் வெளியீட்டு விழா மேடையில் பதற்றம்… தடுமாற்றத்துடன் பேசிய ஹீரோ அஸ்வின்…

நடிகர் அஸ்வின்

நடிகர் அஸ்வின்

பிரபு சாலமன் சாரை நேரில் பார்த்தபோது இந்த கதை உங்களுக்கு ஓகேவா சார் என்று கேட்டேன். அவரது படத்தில் இருப்பதே பாக்கியம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  என்ன சொல்லப் போகிறாய் படத்தை தொடர்ந்து நடிகர் அஸ்வின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, யுவன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  செம்பி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

  இந்த நிகழ்ச்சியில் ஹீரோ அஸ்வின் பேசியதாவது-

  படம் பண்ணுவதே ரொம்ப பாக்கியம். பிரபு சாலமன் சார் இந்த படத்தை இயக்குகிறார் என்று சொன்னதுமே நான் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். இதற்காக தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படமும் எனக்காக அவர் பார்த்து பார்த்து பண்ணினார்.

  சூர்யா- கார்த்தி சகோதரர்கள் வெளியிட்ட நித்தம் ஒரு வானம் ட்ரைலர்

  பிரபு சாலமன் சாரை நேரில் பார்த்தபோது இந்த கதை உங்களுக்கு ஓகேவா சார் என்று கேட்டேன். அவரது படத்தில் இருப்பதே பாக்கியம். இந்த படத்தின் ஷூட்டிங் போகும்போது எனது ட்ராவல் ரொம்ப மோசமாக இருந்தது. அப்போ நெறய பேர் எனக்கு… என்று இழுத்த அஸ்வின், பின்னர் கொஞ்சம் பதற்றப்பட்டு, தேங்க் யூ ஆல். எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. என் ஃபேமிலி, ஃப்ரெண்ட் எல்லோரும் இங்கு வந்துள்ளீர்கள் என்று பேசினார்.

  செல்லப் பெயர் வைத்து அன்பாக அழைக்கிறார்கள்… மாமியார் – மாமனாரை பாராட்டித் தள்ளும் கேத்ரினா…

  கமல் சார் பக்கத்தில் நிற்பதற்கு பாக்கியம் வேண்டும். அவர் பண்ணாத படங்கள் இல்லை. அவர் இருக்கும்போது எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. உலகம் முழுவதும் கமல் சாரை லவ் பண்றாங்க. அவர் இங்கு இருக்கும்போது இந்த மேடையில் பேச எனக்கு தகுதி இல்லை என்றுதான் நான் ஃபீல் பண்ணுகிறேன். தேங்க் யூ சார்.

  இவ்வாறு அஸ்வின் பேசி முடித்தார்.

  முன்பு அவரது முதல் படமான என்ன சொல்ல போகிறாய் படத்தின் விழாவில் பேசிய அஸ்வின், இயக்குனர்களிடம் 40 கதை கேட்டு தூங்கி விட்டதாகவும், தான் தூங்காத கதை தான் இந்த என்ன சொல்லபோகிறாய் படத்தின் கதை என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி படத்திற்கு சிக்கலை உண்டாக்கியது.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood