அட்வான்சுடன் யார் சென்றாலும் கால்ஷீட் உடன் திருப்பி அனுப்புகிறார் பிரவுதேவா. எந்தப் படத்தையும் அவர் வேண்டாம் என்று சொல்வதில்லை இதனால் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்கள் பிரபுதேவா கைவசம் உள்ளன அதில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படம் தான் 'ரேக்ளா'.
வால்டர் திரைப்படத்தை இயக்கிய அன்பு இந்தப் படத்தை இயக்குகிறார். ரேக்ளா என்றதும் கிராமங்களில் நடைபெறும் ரேக்ளா ரேஸ் தான் நமது நினைவுக்கு வரும். அதன் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்படலாம் என்பதே படத்தின் பெயரை பார்க்கும் யாருக்கும் தோன்றும் எண்ணமாக இருக்கும். ஆனால் அப்படி அல்ல என்று இயக்குனர் உஷார்படுத்தி இருக்கிறார்.
ரேக்ளா என்று பெயிரிட்டாலும் இந்தப் படத்தில் ரேக்ளா ரேஸ் சிறிதளவே வருகிறது. இது ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம், ஆக்சன் காட்சிகளும் படத்தில் உண்டு. கிராமம், நகரம் என இரு தளங்களில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது. இதில் கிராமத்தை சேர்ந்த மனிதராக பிரபுதேவா வருகிறார். அவர் நகரத்துக்கு வந்ததும் ஏற்படக்கூடிய பிரச்சினையும் அதன் பின்விளைவுகளும் தான் கதை.
இந்தப் படத்தின் கம்போசிங் பணிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்கிறார். படம் முழுக்க பிரபுதேவா கிராமத்து தோற்றத்தில் வருகிறார். சென்னை, புதுக்கோட்டை, மதுரை, கும்பகோணம் மற்றும் கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்புக்கு கிளம்ப இருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.
படம் இயக்கும் அனைத்து இயக்குனர்களும் கூறுவதுபோல 'வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படம் தயாராகிறது' என இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார். அது எந்த அளவு உண்மை என்பது படம் வெளியாகும்போது தெரிந்துவிடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood movies, Prabhu deva, Tamil Cinema