• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Prabhu Deva : நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபுதேவா படம்..

Prabhu Deva : நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபுதேவா படம்..

பிரபு தேவா

பிரபு தேவா

Prabhu Deva Pon Manickavel Movie : பிரபுதேவா நடித்திருக்கும் படம் திரையரங்குகளுக்குப் பதில் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. 

  • Share this:
    இயக்குனராக தொடர் தோல்விகளை சந்தித்த பிரபுதேவா நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்த 2018 - 19 இல் அறிவிக்கப்பட்ட படம் பொன் மாணிக்கவேல். இதில் பொன் மாணிக்கவேல் என்ற ஐபிஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்திருக்கிறார். படத்தில் இவர் அசிஸ்டெண்ட் கமிஷனராக வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தை முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மகேந்திரன், சுரேஷ் மேனன், சூரி, பிரபாகர் ஆகியோரும் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜெபக் படத்தை தயாரிக்க, டி.இமான் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தை 2020 பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால், பல காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. பிறகு 2020 மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். அன்றும் வெளியாகவில்லை. படத்தின் பல ஏரியாக்கள் விற்பனையாகாமல் இருந்ததே காரணம் என அப்போது சொல்லப்பட்டது. பிறகு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் பொன் மாணிக்கவேல் குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இறுதியில் 2021 ஜுலையில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றனர். மூன்றாவது முறையாக அப்போதும் வெளியீடு தள்ளிப்போனது



    also read : புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினி நெகிழ்ச்சியான இரங்கல்

    திரையரங்கு வெளியீட்டை கனவிலும் நினைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த தயாரிப்பு தரப்பு ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக டிஸ்னி + ஹாட் ஸ்டார் படத்தை வெளியிட முன்வந்துள்ளது. இவர்களின் முந்தைய தமிழ் வெளியீடு எம்ஜிஆர் மகன். படத்தை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என அனைவரும் இதனை கழுவி ஊற்றினர். அடுத்து பொன் மாணிக்கவேலை வெளியிடுகிறார்கள். கதறவிட மாட்டார்கள் என்று நம்புவோம்.

    இந்நிலையில் பொன் மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.



    இந்த படம் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வரும் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: