பிரபுதேவாவுக்கும் பிசியோதெரபிஸ்டுக்கும் நடந்த திருமணம் - உறுதி செய்த ராஜூ சுந்தரம்

நடிகர் பிரபுதேவாவுக்கு சமீபத்தில் இரண்டாவது திருமணம் நடந்ததாக வெளியான தகவலை அவரது சகோதரர் ராஜூ சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரபுதேவாவுக்கும் பிசியோதெரபிஸ்டுக்கும் நடந்த திருமணம் - உறுதி செய்த ராஜூ சுந்தரம்
பிரபுதேவா
  • News18 Tamil
  • Last Updated: November 22, 2020, 11:49 AM IST
  • Share this:
நடன கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரபுதேவா, பின் நடிகர், இயக்குநர் என அவதாரமெடுத்தார். இவரது நடனத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதேபோல் இவர் இயக்கிய தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன.

1995-ம் ஆனடு பிரபுதேவாவுக்கும் ரமலதாவுக்கும் முதலில் திருமணமானது. இத்தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் கடந்த 2008-ம் ஆண்டு மூத்த மகன் விஷால் மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு 12 வயதில் உயிரிழந்தார். இதையடுத்து 2010-ம் ஆண்டு பிரபுதேவாவின் மனைவி ரமலதா விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நயன்தாரா - பிரபுதேவாவுக்கு இடையேயான காதல் தான் ரமலதா விவாகரத்து கோரியதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.

மேலும் பிரபுதேவா - நயன்தாராவை திருமணம் செய்து கொண்டால் தான் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ரமலதா தெரிவித்தார். அப்போது பல்வேறு மகளிர் அமைப்புகள் ரமலதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. 2011-ம் ஆண்டு பிரபு தேவா - ரமலதா தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நயன்தாரா - பிரபுதேவா காதலிலும் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். ஆனால் அதற்கான காரணத்தை இதுவரை இருவரும் வெளிப்படுத்தியதில்லை.


தற்போது 47-வயதாகும் பிரபு பீகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்டை ஹிமானி என்பவரை திருமணம் செய்துள்ளார். பிரபுதேவாவுக்கு முதுகு மற்றும் கால் வலி பிரச்னைக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததாலும் ஊரடங்கினாலும் இத்திருமணத்தில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

எப்படியோ இத்திருமணம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து ஆங்கில நாளிதழ் ஒன்று பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரத்தை தொடர்பு கொண்டு திருமணம் குறித்து விசாரிக்க, அவரும் இந்த கல்யாணம் நடந்தது உண்மை தான். இந்த சுப காரியத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: சூரரைப்போற்று - உண்மையை சொல்லியிருந்தால் ஆவணப்படமாகி இருக்கும் - ஜி.ஆர்.கோபிநாத்தற்போது சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் ‘ராதே’ படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. மேலும் இவர் நடனம் அமைத்துக் கொடுத்த ‘மாரி 2’ படத்தின் ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்திய மொழிகளிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட்ட பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading