Home /News /entertainment /

வெளியானது மை டியர் பூதம் படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ

வெளியானது மை டியர் பூதம் படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ

மை டியர் பூதம்

மை டியர் பூதம்

பிரபுதேவா மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் என். ராகவனின் இயக்கத்தில் குழந்தைகளுக்கான படமாக 'மை டியர் பூதம்'  வெளியாகியுள்ளது. 

  • News18
  • Last Updated :
    நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியாகியுள்ள மை டியர் பூதம் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பிரபுதேவா மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் இயக்குநர் என். ராகவனின் இயக்கத்தில் குழந்தைகளுக்கான படமாக 'மை டியர் பூதம்'  வெளியாகியுள்ளது.  அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

    அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் பிரபுதேவா ஜீனி என்ற பூதமாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரங்களான பரம் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா ஆகியோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    Also read... துல்கர் சல்மானில் காணுன்ன கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

    இப்படத்திற்கு  இமான் இசையமைத்துள்ளார்.  ஒளிப்பதிவு யு கே செந்தில் குமார், எடிட்டிங் சான் லோகேஷ், கலை ஏ ஆர் மோகன் மேற்கொள்ள தேவா வசனம் எழுதியுள்ளார்.



    இந்நிலையில், மை டியர் பூதம் படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சுவாரசியமான குழந்தைகள் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Prabhu deva

    அடுத்த செய்தி