இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குநரின் அடுத்தப் படத்தில் பிரபுதேவா

பிரபு தேவா

பிரபுதேவா, வரலட்சுமி, ரைசா வில்சன் நடிப்பில் புதிய படத்தை இன்று காலை பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

 • Share this:
  இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் படத்தில் பிரபுதேவா, ரைசா வில்சன், வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்கள்.

  சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்றால் பலருக்கும் தெரியவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் என்றால், "ஓ... அவரா" என்கிறார்கள். அடல்ட் காமெடி என்ற ஜானரை கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு குதறியவர் இவர். இவரது இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி, ரைசா வில்சன் நடிக்கும் படம் இன்று தொடங்கியது.

  ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து என படங்களின் பெயரைச் சொன்னாலே அதனை இயக்கியவரின் பல்ஸ் தெரிந்துவிடும். கடைசியாக இவர் தமிழில் கஜினிகாந்த் என்ற காமெடிப் படத்தை எடுத்தார். படம் ஓடவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், பிரபுதேவா, வரலட்சுமி, ரைசா வில்சன் நடிப்பில் புதிய படத்தை இன்று காலை பூஜையுடன் தொடங்கியுள்ளார். தனது முந்தைய அடல்ட் காமெடி ஜானரை மூட்டைக்கட்டி, ஆக்ஷன் என்டர்டெயினராக இதனை எடுக்கிறாராம். ஆகவே, ரசிகர்கள் பயப்பட தேவையில்லை. மினி ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறது. டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார்.

  பிரபுதேவா நடித்திருக்கும் பொன் மாணிக்கவேல் விரைவில் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: