முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபுதேவா மீதான காதல் இப்போதும் அப்படியே இருக்கு - பிரபல நடிகை ஸ்டேட்மெண்ட்!

பிரபுதேவா மீதான காதல் இப்போதும் அப்படியே இருக்கு - பிரபல நடிகை ஸ்டேட்மெண்ட்!

பிரபுதேவா, மஞ்சு வாரியர்

பிரபுதேவா, மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர் ஆயிஷா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இது இண்டோ - அராபிக் திரைப்படமாக தயாராகி வருகிறது. மலையாளம் மற்றும் அரபி இரு மொழியில் இந்தப் படத்தை எடுத்து வருகிறார்கள்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பிரபுதேவா மீது அன்றிருந்த காதல் இப்போதும் இருப்பதாக முன்னணி நடிகை மஞ்சு வாரியர் கூறியிருக்கிறார்.

மஞ்சு வாரியர் ஆயிஷா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இது இண்டோ - அராபிக் திரைப்படமாக தயாராகி வருகிறது. மலையாளம் மற்றும் அரபி இரு மொழியில் இந்தப் படத்தை எடுத்து வருகிறார்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றுகிறார். அவர் நடனம் சொல்லிக் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் மஞ்சு வாரியர், "நான் மம்முட்டி, லாலேட்டன், சோபனா சேச்சி ஆகியோரின் ரசிகை தான். ஆனால் என்னுடைய பால்யத்தில் ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன் என்றால் அது பிரபுதேவாவுக்கு தான்" என குறிப்பிட்டுள்ளார்.

"பிரபுதேவா மீது இருந்த காதல் தனிப்பட்ட முறையில் என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். அந்த காதல் இப்போதும் இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். இங்கு அவர் காதல் என்று தெரிவித்திருப்பது அன்பு நட்பு அடிப்படையிலானது. அதனால் வேறு அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.

ஆயிஷா திரைப்படத்தை அமீர் பள்ளிக்கல் இயக்குகிறார். இந்தியாவின் முதல் இண்டோ - அராபிக் திரைப்படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தில் மலையாள நடிகர்களுடன் பிலிப்பைன்ஸ், நைஜீரியா, ஏமன், துனிசியா, யுஏஇ ஆகிய நாடுகளை சேர்ந்த நடிகர்களும் நடிக்கின்றனர். மலையாளம், ஆங்கிலம், அரபி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது .

Also read... சினிமாவுக்காக பாலியல் தொழிலாளியை சந்தித்த பிரபல நடிகை!

வினித், சோபனா போலவே மஞ்சுவாரியாரும் முறைப்படி நடனம் பயின்றவர். நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். அவர் தன்னுடைய இளவயதில் பிரபுதேவாவின் நடனத்தின் மீது காதல் கொண்டதில் எந்த வியப்பும் இல்லை. தான் நடிக்கும் படத்தில் பிரபுதேவா நடன இயக்குனராக தன்னை இயக்குவதை அவர் பெருமிதமாக கருதியதிலும் ஆச்சரியமில்லை.

First published:

Tags: Manju Warrier, Prabhu deva