முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த வடிவேலு-பிரபுதேவா கூட்டணி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த வடிவேலு-பிரபுதேவா கூட்டணி!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

வடிவேலு நடனமாடும் ஒரு பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில், 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படம் முழு என்டர்டெயினர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, இப்படத்தில் வடிவேலு நடனமாடும் ஒரு பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

பாடல் படப்பிடிப்பின் செட்டில் இருந்து பிரபுதேவா மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகியோருடன் வடிவேலு இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனமான லைகா, "பிரபுதேவா மாஸ்டர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கான ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விலகலுக்கு என் மகன்கள் தான் காரணம் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்

குழந்தையை பெற்றெடுத்த காஜல் அகர்வால் - குவியும் வாழ்த்துகள்!

இப்படத்தில் வடிவேலு தவிர, ஷிவானி, ஆனந்த் ராஜ், சேசு மற்றும் ரெடின் கிங்ஸ்லி (டாக்டர் புகழ்) போன்ற நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே வடிவேலுவின் குரலில் லண்டனில் முதல் பாடலை குழு பதிவு செய்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vadivelu, Prabhu deva