முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபு தேவாவின் 'பகீரா' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபு தேவாவின் 'பகீரா' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபு தேவா

பிரபு தேவா

பிரபுதேவா நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் பஹீரா திரைப்படம் வரும் மார்ச் மூன்றாம் தேதி வெளியாகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபுதேவா நடிப்பில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் பஹீரா திரைப்படம் வரும் மார்ச் மூன்றாம் தேதி வெளியாகிறது.

திரிஷா இல்லனா நயன்தாரா,  அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்,  பிரபுதேவா நடிப்பில் பஹீரா என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியாகாமல் இருந்தது. குறிப்பாக,  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் வேலைகள் முடிவடைந்து விட்டன.  ஆனால் பஹீரா திரைப்படம் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் பஹீரா படத்தை வெளியிடும் வேளையில் தயாரிப்பு நிறுவனம் இறங்கி இருக்கிறது. இந்த  திரைப்படத்தை மார்ச் மூன்றாம் தேதி வெளியிடுவதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.  சைக்கோ திர்லர் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  இதுவரை பார்க்காத பிரபுதேவாவை பஹீரா திரைப்படத்தில் பார்க்கலாம் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Prabhu Deva