முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: மெலினா பட சாயல்... பிரபுதேவா, ரெஜினாவின் ‘ஃப்ளாஷ்பேக்’ பட ட்ரெய்லர்!

Video: மெலினா பட சாயல்... பிரபுதேவா, ரெஜினாவின் ‘ஃப்ளாஷ்பேக்’ பட ட்ரெய்லர்!

ஃப்ளாஷ்பேக் பட ட்ரெய்லர்

ஃப்ளாஷ்பேக் பட ட்ரெய்லர்

Flashback (Tamil) - Official Trailer | பிரபுதேவா மற்றும் ரெஜினா நடித்துள்ள ‘ப்ளாஷ்பேக்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

‘மகாபலிபுரம்’, ‘கொரில்லா’ படங்களை இயக்கிய இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ள படம் ‘ஃப்ளாஷ் பேக்’. அனசுயா பரத்வாஜ், விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபுதேவா எழுத்தாளராக நடித்துள்ள இந்த படத்தில்,  ரெஜினா ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் ஏற்கனவே கூறிய போல இது காமத்தை பற்றி எடுத்து கூறும் படமாக இருக்கும் ஆனால், அது ஆபாசமாக இருக்காது என தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தப் படத்தில், இத்தாலியில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘மெலினா’ படத்தின் சாயலை நினைவூட்டுவதாகவும் ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

' isDesktop="true" id="907734" youtubeid="TytvkRYYLGI" category="cinema">

நன்றி: Think Music India.

First published:

Tags: Prabhu Deva, Regina Cassandra, Tamil Movies Trailer