மீண்டும் கல்யாண் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா - நாயகி யார் தெரியுமா?

மீண்டும் கல்யாண் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா

நடிப்பு சரிவரவில்லை என்றதும் இயக்குனரானார் பிரபுதேவா. அதில் பல வெற்றிகள் கிடைத்தன. பிறகு தொடர் தோல்விகள். உடனே அங்கிருந்து ஷிப்டாகி நடிப்புக்கு வந்தார். அவரது நடிப்பில் பொன்மாணிக்கவேல் தயாராகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரபுதேவா ஒரு முடிவோடுதான் இருக்கிறார். வருகிற எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. இன்று காலை அவர் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. 

நடிப்பு சரிவரவில்லை என்றதும் இயக்குனரானார் பிரபுதேவா. அதில் பல வெற்றிகள் கிடைத்தன. பிறகு தொடர் தோல்விகள். உடனே அங்கிருந்து ஷிப்டாகி நடிப்புக்கு வந்தார். அவரது நடிப்பில் பொன்மாணிக்கவேல் தயாராகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் பூஜைபோட்டு, படப்பிடிப்பை தொடங்கி பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டனர். இந்தப் படத்தில் பிரபுதேவா செயற்கைக் கால் பொருத்தி நடிப்பதால், படத்துக்கு பொய்க்கால் குதிரை என பெயர் வைத்துள்ளனர்.



இன்று தொடங்கிய படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தை இயக்குகிறவர் கல்யாண். வெறும் கல்யாண் அல்ல, அதிர்ஷ்ட கல்யாண். சினிமாவில் சிலர் ஹிட் கொடுத்தாலும் அடுத்த வாய்ப்பு அமையாது. சிலர் தோல்விகளை மட்டுமே தருவார்கள். ஒரு படம் முடிவதற்குள் அடுத்தப்படத்துக்கு அட்வான்சுடன் அவரிடம் போய் நிற்பார்கள்.

Also read... பிரபல OTT தளத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களை குஷிப்படுத்த போகும் நடிகர் வடிவேலு!



கல்யாண் இரண்டாவதுவகை. அவர் இயக்கிய கத சொல்லப்போறோம், குலேபகாவலி, காத்தாடி, ஜாக்பாட் என எந்தப் படமும் ஓடவில்லை. இதில் குலேபகாவலியில் பிரபுதேவாதான் ஹீரோ. இப்போது இந்தப் படத்தில் மறுபடியும் இணைந்துள்ளனர்.  இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: