படம் ரிலீசுக்கு முந்தைய நாள் என்ன செய்வீர்கள்...? அனைவரையும் சிரிக்க வைத்த பிரபாஸ், ஷ்ரதா கபூரின் பதில்கள்

ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகியுள்ள சாஹோ படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது

news18
Updated: August 24, 2019, 9:11 AM IST
படம் ரிலீசுக்கு முந்தைய நாள் என்ன செய்வீர்கள்...? அனைவரையும் சிரிக்க வைத்த பிரபாஸ், ஷ்ரதா கபூரின் பதில்கள்
பிரபாஸ் மற்றும் ஷ்ரதா கபூர்
news18
Updated: August 24, 2019, 9:11 AM IST
சாஹோ படத்தின் விளம்பரப் பணிக்காக பிரபாஸ் மற்றும் ஷர்தா கபூர் இருவரும் கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ. ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, அருண் விஜய், ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படத்தை சுஜீத் எழுதி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் வரும் 30-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.


இந்நிலையில், கபில் சர்மா நிகழ்ச்சியில் சாஹோ படத்தின் ஹீரோ பிரபாஸ் மற்றும் ஹிரோயின் ஷர்தா கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பிரபாஸிடம் நீங்கள் உங்களின் படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் தூங்கிவிடுவீர்கள் என்ற செய்தி வருகிறதே அது உண்மையா என்று கேட்ட கேள்விக்கு, ‘ஆம். தூங்க முயற்சி செய்வேன் ஆனால் பயம் காரணமாக நிம்மதியான தூக்கம் வராது’ என்று பதிலளித்துள்ளார்.

மேலும் பாகுபலி படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட சாஹோ படத்திற்காக 20% குறைவாக தான் வாங்கியிருக்கிறேன். பாகுபலி படத்தின் பட்ஜெட் வேறு, சாஹோ படத்தின் பட்ஜெட் வேறு. பாகுபலி படத்திற்காக வாங்கிய சம்பளத்தையே கேட்க முடியாது என்று எனக்கு தெரியும். படத்தின் தயாரிப்பாளர் எனக்கு தர தயாராக இருந்தார்கள் இருந்தாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஷ்ரதா கபூர், என்னுடைய படத்தின் ரிலீஸ்-க்கு முந்தைய நாள் பயத்தால் எனக்கு வயிற்று வலி வந்து நான் அஜீரணத்தால் சிரமப்படுவேன் என்று பதிலளித்துள்ளார்.

Loading...

Also Watch

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...