ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விமர்சனங்களை தாண்டி யூடியூபில் சாதனை படைத்த ஆதிபுருஷ் டீசர்…

விமர்சனங்களை தாண்டி யூடியூபில் சாதனை படைத்த ஆதிபுருஷ் டீசர்…

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்

ஆதிபுருஷ் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி விஜய்யின் வாரிசு படத்துடன் நேரடியாக மோதவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நெகடிவான விமர்சனங்களைத் தாண்டி பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

    பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் பிரபாஸ் மற்றும் அவரது ரசிகர்கள் அடுத்து வெளிவரவுள்ள ஆதிபுருஷ் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

    ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருக்கிறார். வில்லனாக ராவணன் கேரக்டரில் சைஃப் அலி கான் இடம்பெற்றுள்ளார்.

    அடுத்து என்ன? பொன்னியின் செல்வன் நாவலைத் தேடும் 2k கிட்ஸ்! அதிகரிக்கும் டவுன்லோட்ஸ்!

    ஆதிபுருஷ் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி விஜய்யின் வாரிசு படத்துடன் நேரடியாக மோதவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. டி சீரிஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள ஆதிபுருஷ் படத்தின் இந்தி டீசர் 71 மில்லியன் வியூசைக் கடந்ததுடன், 1 மில்லியன் லைக்ஸையும் பெற்றுள்ளது.

    ' isDesktop="true" id="812965" youtubeid="jF5rJAXUY4A" category="cinema">

    ' isDesktop="true" id="812965" youtubeid="HwdJj8lhOo8" category="cinema">

    டி சீரிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆதிபுருஷ் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    படத்தின் பட்ஜெட் ரூ. 300 – 500 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான பின்னணி இசையை சாஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா அமைத்துள்ளனர். பாடல்களுக்கான அஜய் – அதுல் இசையமைத்துள்ளார்கள்.

    இணையத்தில் நெட்டிசன்கள் வருத்தெடுக்கும் ஆதிபுருஷ் டீசர்.. மீம் மெடிரியலாக மாறிய படத்தின் டீசர்

    ஆதிபுருஷ் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படத்தின் அனிமேஷன், கிராபிக்ஸ், வி.எஃப்.எக்ஸ், எஸ்.எஃப்.எக்ஸ்., உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் திருப்தி அளிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்திருந்தனர்.

    இதனால் படத்தின் மீது நெகடிவான பார்வை ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இவற்றை தாண்டி, ஆதிபுருஷ் படத்தின் டீசர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. இதற்கு யூடியூப் வியூஸ் மற்றும் லைக்ஸ்களே சாட்சி என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor prabhas