பிரபாஸ் உடன் நேரடியாக மோதும் ஜெயம் ரவி!

இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

news18
Updated: July 9, 2019, 4:03 PM IST
பிரபாஸ் உடன் நேரடியாக மோதும் ஜெயம் ரவி!
ஜெயம் ரவி, பிரபாஸ்
news18
Updated: July 9, 2019, 4:03 PM IST
ஜெயம் ரவியின் கோமாளி படமும், பிரபாஸின் சாஹோ படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளன.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24-வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதேநாளில் இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது பிரபாஸின் ‘சாஹோ’. ஆக்‌ஷன் படமான சாஹோ அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. சாஹோவுடன், கோமாளியும் ஒரே நாளில் வெளியாவதால் பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் படங்கள்!

First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...