ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யா படத்துக்கு போட்டியாக 10,000 திரையரங்குகளில் வெளியாகும் ராதே ஷ்யாம்!

சூர்யா படத்துக்கு போட்டியாக 10,000 திரையரங்குகளில் வெளியாகும் ராதே ஷ்யாம்!

ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம்

தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் யுஎஸ்ஸில் இப்படம் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்தை உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்களின் பட்ஜெட் சுலபமாக 250 கோடியை தாண்டி விடுகிறது.

சாஹோ திரைப்படம் அப்படித்தான் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டது. படம் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் நல்ல வசூலை பெற்றது. இந்தி பதிப்பு மட்டும் 140 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது. அவரது ராதே ஷ்யாம் திரைப்படம் ரொமான்டிக் திரில்லராக தயாராகி உள்ளது. இந்தப் படம் மார்ச் 11-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். மார்ச் 10-ம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு கடும் போட்டியாக ராதே ஷ்யாம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Beast First Single: வெளியானது விஜய்யின் பீஸ்ட் அட்டகாச அப்டேட்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழகத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ராதே ஷ்யாம் திரைப்படத்தையும் வெளியிடுகிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ராதே ஷ்யாமில் பிரபாஸுடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பிரபல டி சீரிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. படத்தின் தெலுங்குப் பதிப்புக்கான பின்னணி இசையை எஸ்.தமன் அமைக்க, பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். மகேஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்... கதையைக் கேட்டு கண்ணீர் விட்ட கஸ்தூரி ராஜா?

வெளிநாடுகளைப் பொறுத்தவரை யுஎஸ்தான் இந்திய திரைப்படங்களின் முக்கிய சந்தை. அங்கு 2000 திரையரங்குகளில் ராதே ஷ்யாமை வெளியிட முடிவு செய்துள்ளனர். தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் யுஎஸ்ஸில் இப்படம் வெளியாகிறது. சுமார் 360 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் ராதே ஷ்யாம் வார இறுதி வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor prabhas, Suriya