ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு…

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு…

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், கிராஃபிக்ஸ் சொதப்பல்களால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

  சினிமா ரசிகர்கள் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத பொங்கலாக எதிர்வரும் பொங்கல் அமையவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் – விஜய் படங்கள் பொங்கலுக்கு களம் இறக்கப்படவுள்ளன.

  சோஷியல் மீடியா, ரசிகச் சண்டையின் தாக்கம் தூக்கலாக இருக்கும் இப்போதைய சூழலில், இவ்விரு படங்களின் வெளியீடு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதற்கிடையே, பான் இந்தியா ஹீரோவாகா உயர்ந்து நிற்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் படமும் பொங்கல் ரேஸில் இணைந்திருந்தது. ராமாயணத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில், பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்திருந்தார்.

  களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை... உலகநாயகன் கமல்ஹாசனின் சினிமா பயணம்!

  பொங்கல் வெளியீடு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ட்ரால் மெட்டீரியலாக மாறிப் போனது. மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகளால் இந்த படத்தை நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்தனர்.

  ' isDesktop="true" id="832365" youtubeid="HwdJj8lhOo8" category="cinema">

  தற்போது படத்தில் ஒட்டுமொத்தமாக கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றி வேண்டியுள்ள நிலை ஆதிபுருஷ் படத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக மேலும் ரூ. 100 கோடிக்கும் மேல் செலவாகும் என்று தெரிகிறது.

  விஜய் குறித்து ஷாருக்கான் கூறிய அந்த வார்த்தை... உற்சாகமான ரசிகர்கள்!

  இந்த நிலையில் ஆதிபுருஷ் படம் அடுத்த ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி வெளியாகும்    என படத்தின் இயக்குனர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், கிராஃபிக்ஸ் சொதப்பல்களால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

  இதேபோன்று பிரபாஸுக்கு கடைசியாக வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வெளியீடும் தள்ளிப்போயுள்ளதால் பிரபாஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.

  இதற்கிடையே கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor prabhas