ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH – விமர்சனங்களை தாண்டி, 135 மில்லியன் வியூஸ்களை கடந்த ஆதிபுருஷ் டீசர்

WATCH – விமர்சனங்களை தாண்டி, 135 மில்லியன் வியூஸ்களை கடந்த ஆதிபுருஷ் டீசர்

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்

நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கூடுதல் தரத்துடன் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    எதிர்மறையான விமர்சனங்களை கடந்து பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் 135 மில்லியன் வியூஸ்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    தமிழ் டீசரைப் பார்க்க…

    ' isDesktop="true" id="832469" youtubeid="HwdJj8lhOo8" category="cinema">

    ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரீத்தி சனோன், சைஃப் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில் ஆதிபுருஷ் படம் உருவாகியுள்ளது. பொங்கலையொட்டி ஜனவரி 12-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டீசரில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களை திருப்திபடுத்தாததால் நெகடிவ் விமர்சனங்கள் சரமாரியாக எழுந்தன.

    அடியே அழகே! லாஸ்லியாவின் வேற லெவல் புகைப்படங்கள்..!

    இதனால் படத்தின் வெளியீட்டை ஜூன் 16-ம் தேதிக்கு கொண்டு செல்லும் நிலைமைக்கு படக்குழுவினர் தள்ளப்பட்டார்கள். எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியிலும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் சேர்த்து யூடியூபில் 135 மில்லியன் வியூசை கடந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இந்தியில் இந்த டீசர் 100 மில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor prabhas