Home /News /entertainment /

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுரூஷ் படத்தின் டீசர் அக்டோபர் 3-ஆம்தேதி வெளியாகிறது…

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுரூஷ் படத்தின் டீசர் அக்டோபர் 3-ஆம்தேதி வெளியாகிறது…

இயக்குனர் ஓம் ராவத், நடிகை கீர்த்தி சனோனுடன் பிரபாஸ்

இயக்குனர் ஓம் ராவத், நடிகை கீர்த்தி சனோனுடன் பிரபாஸ்

ஆதிபுரூஷ் படத்தின் டீசரை அயோத்யாவில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன்பின்னர் படத்திற்கான புரொமோஷன் பணிகள் தொடங்குகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுரூஷ் படத்தின் டீசர் அக்டோபர் 3ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

மிகப்பெரும் பொருட் செலவில் ஆதிபுரூஷ் படத்தை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், கிரித்தி சனோன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ராமாயணத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் இம்மாத இறுதியில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில், படத்தின் டீசர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

சந்திரமுகி -2 படத்திற்காக உடல் தோற்றத்தை மாற்றிய ராகவா லாரன்ஸ்…

குறிப்பாக அக்டோபர் 3ஆம் தேதி படத்தின் டீசர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிபுரூஷ் படத்தின் டீசரை அயோத்யாவில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன்பின்னர் படத்திற்கான புரொமோஷன் பணிகள் தொடங்குகிறது.

இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராதே ஷ்யாம் படம் பிரபாஸுக்கு போதிய வரவேற்பை பெற்றுத் தராத நிலையில் ஆதிபுரூஷ் படத்தின் மீது அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

Indian 2: ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கும் அவரது 3 சிஷ்யர்கள்!

அடுத்ததாக கே.ஜி.எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Actor prabhas

அடுத்த செய்தி