2008-ம் ஆண்டு நான் ஒருவரைக் காதலித்தேன்... பிரபாஸ் நட்பு குறித்து மனம் திறந்த அனுஷ்கா!

எனது திருமணம் ஏன் எல்லோருக்கும் பெரிய விஷயமாக உள்ளது எனத் தெரியவில்லை. காதல் உறவை யாராலும் மறைக்க முடியாது. என் திருமணத்தை எப்படி மறைப்பேன்?” என்று கூறியுள்ளார்.

2008-ம் ஆண்டு நான் ஒருவரைக் காதலித்தேன்... பிரபாஸ் நட்பு குறித்து மனம் திறந்த அனுஷ்கா!
இதேபோல 25 வயதை கடந்த பின்னரே திரைத்துறையில் நாயகியாக அறிமுகமான அனுஷ்கா, 38 வயதை கடந்தும் தற்பொழுது வரை தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக வலம் வருகிறார். இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்டி, பின்னர் அதனை குறைக்க முடியாமல் தவித்து வந்த அனுஷ்கா, தற்போது நிசப்தம் திரைப்படத்திற்காக மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியிருக்கிறார்.
  • Share this:
திருமணம், காதல் குறித்து தன்னைச் சுற்றும் வதந்திகள் குறித்து நடிகை அனுஷ்கா மனம் திறந்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவுக்கு வயது 38. இவருக்கு எப்போது திருமணம் என்பதில் இவரை விட ரசிகர்களுக்குத் தான் ஆர்வம் அதிகம்.

பிரபாஸைக் காதலிக்கிறார், கிரிக்கெட் வீரரை விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இஞ்சி இடுப்பழகி பட இயக்குநர் பிரகாஷ் கோவலமுடியை அனுஷ்கா திருமணம் திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டது.


இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் நடிகை அனுஷ்கா, “2008 -ம் ஆண்டு நான் ஒருவரைக் காதலித்தேன். நாங்கள் இருவரும் இப்போது காதலர்களாக இருந்திருந்தால் அவருடைய அடையாளத்தை தெரிவித்திருப்பேன். வேறு வழியில்லாமல் பிரிந்தோம். என்னைப் பொறுத்தவரை அது மரியாதைக்குரிய உறவு.

பிரபாஸை 25 வருடங்களாக எனக்குத் தெரியும். அதிகாலை 3 மணி நண்பர்களில் அவரும் ஒருவர். எங்கள் இருவரையும் இணைத்துப் பேசுவதற்குக் காரணம் இருவருமே திருமணமாகாதவர்கள். நாங்கள் காதலித்தால் அதை மறைக்கத் தெரியாத அளவுக்கு இருவருமே உணர்வுகளை வெளிப்படுத்துபவர்கள்.

எனது திருமணம் ஏன் எல்லோருக்கும் பெரிய விஷயமாக உள்ளது எனத் தெரியவில்லை. காதல் உறவை யாராலும் மறைக்க முடியாது. என் திருமணத்தை எப்படி மறைப்பேன்?” என்று கூறியுள்ளார்.மேலும் படிக்க:விஜய்யின் பெயருடன் இணையத்தில் கசிந்த மாஸ்டர் ஐடி கார்டு..!
First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading