• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Prabhas: சூப்பர் ஹீரோ படத்தில் பிரபாஸ் - நடிகர்களின் சம்பளம் மட்டும் 200 கோடி!

Prabhas: சூப்பர் ஹீரோ படத்தில் பிரபாஸ் - நடிகர்களின் சம்பளம் மட்டும் 200 கோடி!

பிரபாஸ்

பிரபாஸ்

தெலுங்கில் மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் பிரபாஸை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்க உள்ளார்.

  • Share this:
    மாஸ் நடிகர்களின் படத்தில் அவர்களின் சம்பளமே மொத்த பட்ஜெட்டில் 60 சதவீதத்தை பிடித்துக் கொள்கிறது. மீதி 40 சதவீதத்தில் தான் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுத்து, படத்துக்கான செலவும் செய்ய வேண்டும்.

    கொரோனா ஊரடங்கால் ஓடிடி தளங்கள் ஊக்கம் பெற்று, இந்த அநியாயங்கள் குறையும் என்று பார்த்தால், வருகிற செய்திகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர்களின் சம்பளம் மட்டுமே 200 கோடியை தொடும் என தெலுங்கு சினிமாவில் பதறிப் போய் பேசுகிறார்கள்.

    பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்களின் பட்ஜெட் எகிறிவிட்டது. அடுத்து வெளிவந்த சாஹோவாகட்டும், இப்போது தயாரிப்பில் இருக்கும் ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ் எல்லாமே 200 கோடிகளை தொடும் பட்ஜெட். ஆதிபுருஷ் அதுக்கும் மேலே என்கிறார்கள். இந்நிலையில் தான் இந்த புதிய செய்தி.

    தெலுங்கில் மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் பிரபாஸை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்க உள்ளார். பிரபாஸுடன் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்பட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுக்கான சம்பளம் மட்டுமே 200 கோடிகளை தொடும் என்கிறார்கள் தெலுங்கு சினிமாவில். சூப்பர் ஹீரோ படத்துக்கான சிஜி செலவுகள் நொடிகளில் கணக்கிடப்படும். இத்தனை நொடிக்கு இத்தனை கோடிகள். சம்பளமே 200 கோடி என்றால் படத்தின் மொத்த பட்ஜெட்...?

    பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் பெரிய பில்டப்புடன் வெளியான சாஹோ மண்ணை கவ்வியது. ராதே ஷ்யாம், சலார் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே, இந்த சூப்பர் ஹீரோ படத்துக்கு பட்ஜெட் ஒதுக்கப்படும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: