பிரபாஸ் நடிப்பில் கே.ஜி.எஃப்.2 இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தின் அப்டேட்டை வெளியிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இம்மாதத்தில் தற்கொலை செய்யப்போவதாகவும் பிரபாஸ் ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளியான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
இந்நிலையில் கே.ஜி.எஃப். 2 இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எஃப். 2 படத்தை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ்தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க - கோப்ரா படத்தில் 20 விதமான கெட்அப்பில் வரும் நடிகர் விக்ரம்…. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டம்
சலார் படத்திற்கு கடந்த ஆண்டு ஜனவரி 15-ம்தேதி பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே முன்பே படப்பிடிப்பில் இருந்த ராதே ஷ்யாம் படம் சமீபத்தில் வெளியாகி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் பிரபாஸின் தீவிர ரசிகர் ஒருவர், சலார் படத்தின் அப்டேட்டை இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் வெளியிடாவிட்டால் இம்மாதம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...
தற்கொலை கடிதம் என தலைப்பிட்டு அந்த நபர் எழுதியுள்ள கடிதத்தில், ‘சாஹோ, ராதே ஷ்யாம் படங்களின் தோல்வியால் நாங்கள் ஏற்கனவே அதிருப்தியிலும், வேதனையிலும் இருக்கிறோம். சலார் படத்தின் டீசர் குறித்து மே மாதம் அறிவிப்பு வெளியாகும் என்றார்கள்.
சலார் பட பூஜை காட்சிகள்
ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் இல்லை. இந்த மாதத்தில் சலார் படத்தின் அப்டேட் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று அந்த ரசிகர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.