Home /News /entertainment /

முதல்முறையாக பிரபாஸ் உடன் ஜோடி சேரும் தீபிகா படுகோன்

முதல்முறையாக பிரபாஸ் உடன் ஜோடி சேரும் தீபிகா படுகோன்

பிரபாஸ் | தீபிகா படுகோன்

பிரபாஸ் | தீபிகா படுகோன்

பிரபல பாலிவுட் நடிகை முதல்முறையாக பிரபாஸ் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

    பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்படும் ஹீரோவான பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகுபலி படத்துக்கு பின்னர் சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ், அதைத்தொடர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இது அவரது 21-வது படமாகும்.

    இத்திரைப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படம். அறிவியல் பின்னணியில் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நடிகையர் திலகம் திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.



    வைஜெயந்தி ஃபிலிம்ஸின் 50-வது வருடத்தில் இந்த மெகா பட்ஜெட் படம் உருவாகவுள்ளது. மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor prabhas, Deepika Padukone

    அடுத்த செய்தி