பவர் ஸ்டார் நடிக்கும் ‘முருங்கக்காய்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

பவர் ஸ்டார் நடிக்கும் முருங்கக்காய் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் நடிக்கும் ‘முருங்கக்காய்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
நடிகர் பவர் ஸ்டார்
  • Share this:
மருத்துவத் துறையில் இருந்து திரைப்பட நடிகராக அவதாரமெடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன், காமெடி நடிகராக பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். மேலும் சந்தானத்துடன் படங்களில் காமெடி செய்து அசத்தியுள்ளார். சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக பவர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டிக் கொண்ட இவர் தற்போது முருங்கக்காய் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர் மாரிமுத்து, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கழுத்தில் மல்லிகைப்பூ மாலையுடன் கட்டிலில் புதுமாப்பிள்ளை கோலத்தில் படுத்திருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். பால் சொம்பு கீழே கிடக்க முதலிரவு அறையை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.

குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு பிரேம்குமார் சிவ பெருமான் இசையமைக்கிறார். எஸ்.எல்.எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக எஸ்.ஆர்.ரம்யா இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.




ஏற்கெனவே சாந்தனு - அதுல்யா நடிப்பில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் உருவாகி வரும் நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் ‘முருங்கக்காய்’டைட்டிலை கையிலெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading