• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புனித் ராஜ்குமாரின் கண்கள் மூலம் பார்வைபெற்ற 4 இளைஞர்கள்

புனித் ராஜ்குமாரின் கண்கள் மூலம் பார்வைபெற்ற 4 இளைஞர்கள்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரிடன் குடும்பத்தின் ஒப்புதலுடன் தானமாக பெறப்பட்ட கண்கள் மூலம், 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

  • Share this:
    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளியன்று உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் கண்கள் பெங்களுருவில் உள்ள நாராயண நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. தானமாக பெறப்பட்ட புனித்தின் கண்களில் கருவிழிகளும், விழித்திரைகளும் 4 பேருக்கு பொருத்தப்பட்டன. கருவிழிகள் இரண்டாக பிளக்கப்பட்டு முதல்பாதி ஒருவருக்கும், அடுத்த பாதி மற்றொருவருக்கும் என தலா 4 பேருக்கு அளிக்கப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த அறுவை சிகிச்சையில் , புனித்தின் கண்கள் மூலம் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புனித்தின் கண்களை பெற்ற 4 பேரும் பார்வையற்ற கன்னட இளைஞர்கள் என்றும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த 4 அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    புனித் ராஜ்குமாருக்கு முன்னதாக, அவரின் தந்தை ராஜ்குமார் மற்றும் தாய் பர்வதம்மாளும் கண்தானம் செய்துள்ளனர். புனித்தின் கண்கள் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட 4 பேரும் ஆரோக்கியமாக உள்ளதாகவும், 4 பேரின் கண்பார்வையும் தற்போது முன்னேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: