• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு மாரடைப்பு?

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு மாரடைப்பு?

பவர் ஸ்டார்

பவர் ஸ்டார்

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
    நடிகர் பவர் ஸ்டார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    லத்திகா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாக்டர் பவர்ஸ்டார் சீனிவாசன். இதையடுத்து ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்தார். தற்போது ‘பிக்கப் டிராப்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

    இதில் ஹீரோவாக பவர் ஸ்டார் சீனிவாசனே நடிக்க, அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த அவரை படக்குழுவினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.



    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வெளியான நாளிதழ் செய்தியை நடிகர் சங்கம் பி.ஆர்.வோ பக்கம், தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: