Home /News /entertainment /

ஓ.டி.டி. தளத்தில் 10 மில்லியன் பார்வைகள்… சாதனை படைத்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம்…

ஓ.டி.டி. தளத்தில் 10 மில்லியன் பார்வைகள்… சாதனை படைத்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம்…

போத்தனூர் தபால் நிலையம் படத்தின் போஸ்டர்

போத்தனூர் தபால் நிலையம் படத்தின் போஸ்டர்

போத்தனூர் தபால் நிலையம் படத்தின் வெற்றி இன்னும் பல நல்ல சிறிய திரைப்படங்களை ஓ.டி.டியில் வெளியிட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுமுகங்கள் நடித்த போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் பத்து மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர்.

போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம் ஆஹா ஓ.டி.டி தளத்தில் பத்து மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

முற்றிலும் புது முகங்களின் நடிப்பில் உருவான போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம் கடந்த மே மாதம் 27ஆம் தேதி ஆஹா ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியானது.

‘எத்தனையோ லெஜெண்ட்ஸ் முயற்சித்தார்கள்… ஆனால் செய்து முடித்தவர் மணிரத்னம்’ – ஜெயம் ரவி புகழாரம்

அந்தப் படத்தை பிரவீன் என்பவர் இயக்கி நாயகனாக நடித்திருந்தார். ஒரு தபால் நிலையத்தில் நடைபெறும் கொள்ளையை மையமாக வைத்து அந்தப் படத்தை எடுத்திருந்தனர். இந்த திரைப்படத்தை தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தந்தை தமிழில் தொடங்கியுள்ள ஆஹா ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியிட்டனர்.

ட்ரெய்லரைப் பார்க்க...



போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம் ஆஹா தளத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து போத்தனூர் தபால் நிலையத்தின் வெற்றியை அப்பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

போத்தனூர் தபால் நிலையம் படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. அதன் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்த நிலையில், விரைவில் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை தொடங்க உள்ளனர்.

‘பொன்னியின் செல்வன் நம் படம், தமிழர்கள் படம்’ – பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்தி எமோஷனல்…

ஓ.டி.டி நிறுவனங்கள் பெரும்பாலும் புது முகங்கள் நடித்துள்ள படத்தையும், சிறிய திரைப்படங்களையும் வாங்கி வெளியிடுவது குறைவு. ஆனால் போத்தனூர் தபால் நிலையம் படத்தை ஆஹா ஓ.டி.டி தளம் நம்பிக்கையுடன் வாங்கி வெளியிட்டது.

இந்த நிலையில் 10 மில்லியன் பார்வைகளை அந்த படம் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி இன்னும் பல நல்ல சிறிய திரைப்படங்களை ஓ.டி.டியில் வெளியிட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி