2000-க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்த நடிகர் மீது வழக்கு - 90 ஆண்டுகள் ஜெயில் தண்டனையா?

4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரபல நடிகருக்கு 90 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2000-க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்த நடிகர் மீது வழக்கு - 90 ஆண்டுகள் ஜெயில் தண்டனையா?
கோப்பு படம்
  • Share this:
1970-ம் ஆண்டுகளில் ஆபாச படங்களில் நடித்த ரான் ஜெர்மி இதுவரை 2000-க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர். இவருக்கு வயது 67.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் உள்ளது. அதில் 25 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு 25 வயது பெண்ணை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 3 பெண்கள் ரான் ஜெர்மியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு லாஸ் ஏஞ்சல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 90 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரான் ஜெர்மியின் வழக்கறிஞர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading