ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல இளம் நடிகர் தற்கொலை : ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல இளம் நடிகர் தற்கொலை : ரசிகர்கள் அதிர்ச்சி

மறைந்த நடிகர் சுதீர் வர்மா

மறைந்த நடிகர் சுதீர் வர்மா

சுதீர் வர்மாவின் மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுவாமி ரா ரா, குண்டன பொம்மா போன்ற தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சுதீர் வர்மா. அவரது நடிப்புக்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தன. இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சுதீர் வர்மா இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. சுதீர் வர்மாவின் மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலகின் சுதீர் வர்மாவிற்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

சுதீர் வர்மாவின் மரணத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. இவரது இறுதிச்சடங்கானது நாளை விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவரது தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Commit suicide, Telugu