’தீண்டத்தகாதவர் போல போலீசார் நடத்தினர்...’ பிரபல டிவி தொகுப்பாளினி வேதனை

திருட்டு புகார் கொடுக்கச் சென்ற தன்னை தீண்டத்தகாதவர் போல போலீசார் நடத்தியதாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யா வேதனை தெரிவித்துள்ளார்.

’தீண்டத்தகாதவர் போல போலீசார் நடத்தினர்...’ பிரபல டிவி தொகுப்பாளினி வேதனை
பாரீஸ் நகரத்தில் பணத்தை பறிகொடுத்த திவ்யா
  • Share this:
தமிழ் தொலைக்காட்சி முன்னணி தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் திவ்யா. பிரபல தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்குவதை காண்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு.
வில்லு படத்தில் 'தீம்தனக்க தில்லானா', தீராத விலையாட்டு பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே போன்ற பாடல்களையும் பாடியுள்ளார்.

கடந்த ஆண்டு, திவ்யா தனது நண்பர் ஷிபுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதை குறைத்துக்கொண்டார்.


இந்நிலையில், திவ்யா தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், திருமணத்திற்கு பின்னர் கணவருடன் பாரீஸ் சென்றபோது, தங்கள் கைப்பை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அதில், இருவரது பாஸ்போர்ட், லாப்டாப், மொபைல் போன், ஐ பேட், மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம் என அனைத்துப் பொருட்கள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, புகாரை பெற மறுத்ததுடன், அடுத்தடுத்த இரு காவல்நிலையங்களுக்கு அலைய விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்

3-வது காவல்நிலையத்தில் 4 மணிநேரம் காத்திருந்த பின்னர், பறிகொடுத்த பொருட்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த திவ்யா, சிசிடிவி மூலம் குற்றவாளிகளைப் பிடிக்கப் போவதில்லையா எனக் கேள்வி கேட்டுள்ளார்.

ALSO READ : பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

அதைக் கேட்ட காவலர் ஒருவர் சிரித்து விட்டு நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா எனக் கேட்டதாக தனது இன்ஸ்டா பதிவில் பொங்கியுள்ளார் திவ்யா, தங்களது பொருட்கள் பறிபோனதை விட, பாரீஸ் போலீசார் தங்களை தீண்டத் தகாதவர்கள் போல் நடத்தியதாக தனது இஸ்டா பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்

வெளிநாடு செல்லக் கூடிய இந்தியர்கள், தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.









First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading