டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். ரஷ்யா வரை சென்று மெகா பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லெ, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் இருந்து ‘அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில், பட ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்திய படமாக உருவான பீஸ்ட் கடந்த 13ம் தேதி பட்டி, தொட்டி என உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிமான திரையரங்குகளில் பீஸ்ட் படம் திரையிடப்பட்டது. படம் வெளியான முதல் நாளே வலிமை, அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் பட வசூலை எல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் தியேட்டர்களின் செகண்ட் ஆஃப் ஓடிக்கொண்டிருக்கும் போதே, சோசியல் மீடியாவில் நெகட்டிவ் கமெண்ட்கள் பற்றி எரிய ஆரம்பித்தன. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பதாகவும், நெல்சன் இயக்கத்தில் சொதப்பிவிட்டதாகவும் தாறுமாறாக விமர்சனங்கள் குவிந்தன. ஆனால் விஜய் ரசிகர்களோ வேண்டுமென்றே பீஸ்ட் படம் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டினர். முதல் நாளில் தியேட்டர்களில் பீஸ்ட் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
also read : திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்
இதனிடையே மறுநாளான ஏப்ரல் 14ம் தேதி அன்று கே.ஜி.எஃப் திரைப்படம் வெளியானது. கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் தாறுமாறு வரவேற்பு கிடைத்தது. உடனே யூ-டியூப் ரிவ்யூவர்கள் முதல் நெட்டிசன்கள் வரை ‘கே.ஜி.எஃப் 2’ படத்துடன் ‘பீஸ்ட்’ படத்தை ஒப்பிட்டு விமர்சிக்க ஆரம்பித்தனர். படம் மொக்கையாக இருப்பதாக மக்கள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வந்தாலும், திரைப்பிரபலங்கள் யாரும் இதுவரை பீஸ்ட் படத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை.
also read : நெல்சனுக்கு நம்பிக்கை அளித்த ரஜினிகாந்த்... தலைவர் 169 படம் விரைவில் தொடக்கம்!
விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் படம் பார்த்த நிலையில் இருவருக்குமே பீஸ்ட் படம் திருப்தி அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. விஜய்யின் அப்பா என்பதால் எஸ்.ஏ.சி ஓபனாக படம் சரியில்லை என சொல்லிவிட்டார். சன் பிக்சர்ஸ் ஏற்பாட்டில் பீஸ்ட் படம் பார்த்த ரஜினிகாந்த் படம் எப்படி இருந்தது எனக்கேட்டதற்கு ‘ஐஸ்கிரீம் நல்லா இருந்தது’ என ஒற்றை வார்த்தை நெல்சனை பங்கப்படுத்திவிட்டு சென்றதாக செவி வழிச்செய்திகள் பரவி வருகின்றன.
also read : KGF 2 பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய படங்கள்..
பீஸ்ட் படம் பற்றி சமூக வலைத்தளங்களில் ட்ரோல்கள் அதிகம் வந்துகொண்டிருப்பதால் தளபதி ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். இந்த நேரம் வாண்டடாக வந்து வாயை கொடுத்து மாட்டியுள்ளார் பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "Is Beast a spoof on mega heroic movies" என அவர் கேட்டிருக்கிறார். அதாவது பீஸ்ட் திரைப்படம் மெகா ஹீரோச படங்களின் ஏமாற்று வேலையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோதாதா? விஜய் ரசிகர்களை வெறுப்பேற்ற, ஸ்ரீனிவாஸ் ட்வீட்டால் கடுப்பான விஜய் ரசிகர்கள் சகட்டுமேனிக்கு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Beast