விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை - வருத்தத்தில் சீனியர் நடிகை

விஜய் நடித்த சிவகாசி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்திருக்கிறார் சரண்யா பொண்வண்ணன்.

விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை - வருத்தத்தில் சீனியர் நடிகை
விஜய்
  • News18
  • Last Updated: May 7, 2019, 8:19 PM IST
  • Share this:
விஜய்க்கு அம்மாவாக இன்னும் நடிக்கவில்லை என்ற குறை இருப்பதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் தற்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். தற்போது அந்த ஆசை நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கு வந்துள்ளது. அவர் விஜய்க்கு அம்மாவாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் .


இவர் ஒரு பேட்டியில், நான் மற்ற பெறிய நடிகர்களில் நிறைய பேருக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். ஆனால் விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்கவில்லை என்ற குறை இருக்கிறது. ஆனால் அவருக்கு அண்ணியாக நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.விஜய் நடித்த சிவகாசி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்திருக்கிறார் சரண்யா பொண்வண்ணன். அந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார்.தற்போது நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 63 என்று தற்காலிகமாக இந்தப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பெரிய கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Also watch

First published: May 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்