• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தலைவி பட புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா? ராஜா ராணி சீரியல் நடிகர் பகிர்ந்த சுவாரஸ்யம்

தலைவி பட புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா? ராஜா ராணி சீரியல் நடிகர் பகிர்ந்த சுவாரஸ்யம்

தலைவி

தலைவி

லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தலைவி படத்தின் புகைப்படத்தில் தான் இருக்கும் இடத்தை அம்புக்குறியிட்டு காட்டியிருக்கிறார் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் நடிகர் சைவம் ரவி.

  • Share this:
தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் புதிய படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடிக்கின்றனர்.

படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டிருக்கும் தலைவி படம் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஷ்ணுவர்த்தன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நடிகையாக இருந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேஷன் மற்றும் முத்துராமன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் அப்போதைய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த அவர், முன்னணி கதாநாயகியாகவும் உயர்ந்தார்.

Also Read : என்னை திருமணம் செய்துகொள்வீர்களா? குதர்கமான கேள்வி கேட்ட ரசிகர்க்கு மீனா சொன்ன சுவாரஸ்ய பதில்

எம்.ஜி.ஆர் மூலம் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு தீவிரமாக அதிமுகவுக்கு களப்பணியாற்றினார். பின்னர் அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஜெயலலிதா, இறக்கும் வரை கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். 5 முறை தமிழக முதலமைச்சராகவும் இருந்து தமிழகத்துக்கு நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்கள்.

சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வு என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரை பதித்து வாழ்ந்த அவரின் வாழ்க்கையில் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. இதனால், தலைவி படத்தில் அவரின் வாழ்க்கை வரலாற்று பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடன் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் பலரும் இருக்கும் சூழ்நிலையில் கதையில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில், தலைவி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Also Read : சினமாவில் நடிகர், நடிகையாக ஆசையா? நடிக்க வாய்ப்பு தரும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் சைவம் ரவியும் தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படத்திலும் அவர் இருக்கிறார். பலரும் இதனை கவனிக்காத நிலையில், தான் இருக்கும் இடத்தை அம்புக்குறியிட்டு மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Saivam Ravi (@saivamravi)


அவருக்கு சின்னத்திரை நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்து பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், தலைவி திரைப்படம் அரசியல் படம் அல்ல என விளக்கமளித்துள்ளார். முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: