Home /News /entertainment /

கேங்ஸ்டராக மாறிய பிரபல அம்மா நடிகை!

கேங்ஸ்டராக மாறிய பிரபல அம்மா நடிகை!

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன்

சீரியஸான கேங்க்ஸ்டர் படம் என்றாலும் குடும்பம் சென்டிமெண்ட் நகைச்சுவை கலந்து படத்தை எடுத்திருப்பதாக விஷ்ணு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தமிழ் சினிமாவில் அம்மா நடிகையாக ஆழ வேரூன்றியவர் சரண்யா பொன்வண்ணன். அப்படிப்பட்டவரை கேங்ஸ்டராக வைத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா.

சரண்யா பொன்வண்ணனை கேங்ஸ்டராக மாற்றிய அந்த துணிச்சல்காரர் விஷ்ணு ராமகிருஷ்ணன். இவர் பிரபுதேவா நடித்த ஊமை விழிகள் படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் இயக்கியிருக்கும் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார்.

அம்மா வேடங்களில் நடித்து வருகிறவரை ஏன் கேங்ஸ்டர் ஆக்கினீர்கள் என்று கேட்டால், அந்த ஸ்டீரியோடைப்பை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை கேங்ஸ்டராக்கினேன் என்கிறார் விஷ்ணு ராமகிருஷ்ணன்.

கேங்ஸ்டராக நடிக்க சரண்யா பொன்வண்ணன் முதலில் ஒத்துக் கொள்ளவில்லையாம். காரணம் படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் உண்டு. துப்பாக்கியால் சுடும் காட்சிகளும் இருந்தன. இந்தக் காட்சிகள் தனது இமேஜுக்கு செட் ஆகுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்திருக்கிறது. தயங்கிக் கொண்டுதான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சண்டை காட்சியில் நடிக்கிற அன்றும் அவர் டென்ஷனாகவே இருந்திருக்கிறார். ஆனால் கையில் துப்பாக்கியை கொடுத்ததும் ஏற்கனவே அதனை சுட்டு பழகியவர் போல் மிகவும் எளிதாக அந்த காட்சியில் நடித்திருக்கிறார்.

இசை என்பதே ஏமாற்று வேலை தான் - இளையராஜா ஏன் அப்படி சொன்னார்?

இத்தனைக்கும் அவர் பயன்படுத்தியது சாதாரணமான கைத்துப்பாக்கி அல்ல. வெளிநாட்டிலிருந்து தருவித்த தானியங்கி துப்பாக்கி. சாதாரண துப்பாக்கியைவிட எடை கூடியது.
சரண்யா பொன்வண்ணன் இதில் ரிட்டையர்ட் கேங்ஸ்டராக வருகிறார். குடும்பத்துடன் அமைதியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில் அவரது குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை வருகிறது. அதனை தொடர்ந்து மீண்டும் அவர் பழைய கேங்ஸ்டராக மாறி பிரச்சனையை முறியடிப்பதுதான் படத்தின் கதை.

நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

சீரியஸான கேங்க்ஸ்டர் படம் என்றாலும் குடும்பம் சென்டிமெண்ட் நகைச்சுவை கலந்து படத்தை எடுத்திருப்பதாக விஷ்ணு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தில் ராஜ் வர்மா வில்லனாக நடித்துள்ளார். அம்ஜத் கான் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற அம்மா நடிகையின் கேங்ஸ்டர் அவதாரம் எப்படி இருக்கும்? கற்பனையே சுவாரஸியமாகதான் இருக்கு.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actress Saranya, Tamil Cinema

அடுத்த செய்தி