• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிம்பு படத்தில் பிரபல மலையாள நடிகர்...?

சிம்பு படத்தில் பிரபல மலையாள நடிகர்...?

சிம்பு

சிம்பு

Simbu : வெந்து தணிந்தது காடு படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  • Share this:
    கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

    ஜெயமோகனின் கதை, திரைக்கதையில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் தயாராகி வருகிறது. திருச்செந்தூரில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து நடந்தது. முக்கிய காட்சிகளை மும்பையில் கௌதம் படமாக்கியுள்ளார்

    இந்தப் படத்தில் மலையாளத்தின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான நீரஜ் மாதவ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபமாக மலையாள நடிகர்களை தமிழில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் மலையாளத்தின் பிரபல நடிகர் பாபுராஜ் நடித்துள்ளார். கமலின் விக்ரம் படத்தில் பகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடிக்கின்றனர். விஜய்யின் பீஸ்டில் ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறார். இதேபோல் செம்பன் வினோத், மணிகண்டன் உள்பட பல நடிகர்கள் பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகின்றனர்

    also read : கான கந்தர்வன் யேசுதாஸ் 60..

    நீரஜ் மாதவன் மதுர நாரங்கா, லவ குசா, ஒரு வடக்கன் செல்பி, சார்லி, அள்ளு ராமேந்திரன், கவுதமின்டெ ரதம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தி பேமிலி மேன் சீஸன் ஒன்றில் பிரதான வில்லன் கதாபாத்திரத்திலும் நீரஜ் நடித்திருந்தார். அவர் முதல்முறையாக தமிழில் கௌதம் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    வெந்து தணிந்தது காடு படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: