• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cool Jayanth : பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் புற்றுநோயால் காலமானார்

Cool Jayanth : பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் புற்றுநோயால் காலமானார்

கூல் ஜெயந்த்

கூல் ஜெயந்த்

Cool Jayanth Demise : 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கல்லூரி சாலை பாடலின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார்.

  • Share this:
    பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் புற்றுநோயால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கூல் ஜெயந்த்.

    90களில் பிறந்தவர்களால் என்றுமே மறக்க இயலாத, தற்போதுவரை நண்பர்களின் தேசிய கீதமாக கொண்டாடப்படும் இப்பாடலுக்கு நடனம் அமைத்தவர்தான் கூல் ஜெயந்த்.

    ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குரூப் டான்ஸராக அறிமுகமான இவர் பின்னர் பிரபுதேவா,ராஜசுந்தரம் மாஸ்டர்களின் நடனக் குழுவில் உதவி நடன இயக்குனராக 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றினார். குறிப்பாக சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, முக்காலா முக்காபுலா பாடல்களில் முன்வரிசையில் நடனமாடிய இவரை அன்றே பலரும் அடையாளம் கண்டுகொண்டனர்.

    தொடர்ந்து பல படங்களில் உதவி நடன இயக்குனராக பணியாற்றிய கூல் ஜெயந்த், 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கல்லூரி சாலை பாடலின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். ஏ ஆர் ரகுமானின் துள்ளலான இசை, மிகப் பிரமாண்டமான அரங்கம் என முதல் பாடலே இவரை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவர, அந்த பாடலில் இடம்பெற்ற ராப் போர்ஷனில் இவரே நடனமாடியும் அசத்தினார்.

    also read : முழுசா சந்திரமுகியா மாறுன அக்‌ஷரா... பீப் போட வைத்த நிரூப் - வருணின் சண்டைகள்!

    அதன்பின் நடன இயக்குனராக பல வெற்றி பாடல்களில் பணியாற்றிய இவர், அன்றைய வளரும் நட்சத்திரங்களாக இருந்த விஜய், அஜித் ஆகியோரது திரை பயணத்தில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக மாண்புமிகு மாணவன் படத்தில் முதல் முறையாக விஜய்யை இரட்டை வேடத்தில் ஆடவைத்த இவர் நினைத்தேன் வந்தாய், லவ் டுடே, பிரியமானவளே, குஷி என அடுத்தடுத்து 12 படங்களில் விஜயுடன் பணியாற்றினார். இதில் குஷி படத்தில் இவர் வடிவமைத்த விஜய்யின் பங்கீ ஜம்பிங் காட்சி அந்நாளில் பெரிதும் பேசப்பட்டது.

    விஜய்யைப் போலவே அஜித்தின் ஆஸ்தான நடன இயக்குனராக பல படங்களில் அவருடன் கூல் ஜெயந்த் பணியாற்றியுள்ளார். குறிப்பாக வாலி படத்தில் இடம்பெற்ற ஏப்ரல் மாதத்தில் பாடல் தற்போது வரை இவரது பெயர் சொல்லும் பாடலாக கொண்டாடப்படுகிறது.

    also read ; சிவகார்த்திகேயனின் 'டான்'.. அடாது மழையிலும் விடாது டப்பிங்..

    தமிழுக்கு இணையாக மலையாளத்திலும் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ள கூல் ஜெயந்த், Four the student படத்துக்காக கேரள அரசின் சிறந்த நடன இயக்குனருக்கான விருதையும் கைப்பற்றினார்.

    25 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய கூல் ஜெயந்த், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்மைக்காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி மறைந்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: