அழுகிய நிலையில் ரஜினி பட வில்லன் நடிகர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2000-ம் ஆண்டில் நடிகை உஷா பச்சானியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அழுகிய நிலையில் ரஜினி பட வில்லன் நடிகர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
நடிகர் மகேஷ் ஆனந்த்
  • News18
  • Last Updated: February 10, 2019, 3:12 PM IST
  • Share this:
‘வீரா’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.

1980 மற்றும் 90-களில் இந்தியில் பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து பிரபலமானவர் மகேஷ் ஆனந்த். இவர் தமிழில் விஜயகாந்துடன் பெரிய மருது, ரஜினிகாந்துடன் வீரா ஆகிய படங்களில் நடித்திருந்தார். வீரா படத்தில் இவர் பேசிய ஐ எம் பேட் மேன் என்ற வசனம் அப்போது பிரபலமானது.

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2000-ம் ஆண்டில் நடிகை உஷா பச்சானியைக் காதல் திருமணம் செய்துகொண்டார். 2 வருடங்கள் திருமண வாழ்க்கையை வாழ்ந்த இவர்கள் பின்னர் விவாகரத்து பெற்றனர். 2002-ம் ஆண்டிலிருந்து மும்பை வெர்சோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிந்து வந்த மகேஷ் ஆனந்த் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வந்த இவர் 18 வருடங்களுக்குப் பிறகு நடிகர் கோவிந்தாவின் ரங்கீலா ராஜா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த மாதம் ரிலீசானது.
இந்தநிலையில் மகேஷ் ஆனந்தின் வீட்டில் வேலைசெய்யும் பெண் நேற்று அவரது வீட்டுக்கு வழக்கம்போல் வந்து கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனே அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் கதவைத் தட்டியும் பயனில்லை.

இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மகேஷ் ஆனந்தின் வீட்டுக்கு வந்தடைந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மகேஷ் ஆனந்த் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அருகில் சில மதுபாட்டில்கள் கிடந்தன. இதையடுத்து அவர் உடலை, உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்புரில் பிரதமர் வருகையையொட்டி கோ பேக் மோடி என வைகோ முழக்கம் - வீடியோ

First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்